ஓவியர் மணிவேல்
ஸ்ரீ சுந்தரேஸ்வரர், மதுரை
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1986
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
கருவறையில் சதுரபீட ஆவுடையாருடன் விளங்கும் பெருமானுக்கு, சிறப்பு காலங்களில் செய்யப்படும் அலங்காரத்துடன் காட்சி தரும்படி ஓவியர் தீட்டியுள்ளார். தங்கத்தால் ஆன நாகாபரணமும், தங்க வில்வ மாலையும், வைரங்கள் இழைத்த திருநீற்றுப் பட்டையுடன் விளங்கும் சொக்கநாதரின் அலங்காரம், கண் இமைக்காமல் அவரைக் கண்டு வழிபட வைக்கும்.
கழுத்தில் அணிந்திருக்கும் தங்கம் பூட்டிய கெளரி – சங்கர ருத்ராட்ஷ மாலை நேரில் சென்றாலும் நாம் கவனிக்க முடியாத சிறப்பு. கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்படிக லிங்கத்தையும் ஆவணப்படுத்தியுள்ள ஓவியரை வணங்கி மகிழலாம்.
அதோடு, பள்ளியறை பூஜையில் எழுந்தருளப்பண்ணப்படும் பெருமானின் பாதுகைகளை அதற்கே உரிய சிம்மாசனத்தோடு காட்டியுள்ளார். சொக்கநாதரின் போகசத்தியான மனோன்மணி அம்பிகையையும் அவள் எழுந்தருளி இருக்கும் எழில் கோலத்தையும்கூட விடாது படம் பிடித்துக் காட்டியிருக்கும் திறம் வியந்து கொண்டாடத்தக்கது.
சூரிய, சந்திர பிறை தீபங்களோடு திகழும் சொக்கநாதப் பெருமானின் வடிவழகை, இந்த ஓவியத்தில் கண்ணாரக் கண்டு அதன்பின் நேரில் சென்று தரிசித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
