அந்தரங்க தரவு கொள்கை

அந்தரங்க தரவு என்றால் என்ன

சித்திரம் இணையதளத்தை பயன்படுத்தும்போது, பயனர்களின் செயல்களால் தரவுகள் உருவாகின்றன. உதாரணம்: ‘பயனர் ’ என்ற நபர் ‘ஓவியம்’ என்ற ஓவியத்தை  வாங்குகிறார். அதன் மூலம் அவர் தொடர்பான ஒரு தரவு உருவாகிறது. அதாவது, அவர் ‘ஓவியம்’ என்ற ஓவியத்தை  என்ற புத்தகத்தை குறிப்பிட்ட தேதியில், நேரத்தில், விலையில் வாங்கினார் என்ற தரவு. இது அந்தரங்க தரவு. ஏனெனில், ‘பயனர் ’ குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கினார் என்பது, அவருக்கும் புத்தகத்தை விற்றவருக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை.  

என்னென்ன தரவுகள் சேகரிக்கப்படும்? ஏன்?

தரவு 1: பயனர் பதிவின்போதும், ஓவியங்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்கும் போதும் பயனர் உள்ளிடும் தகவல்.

ஏன் சேகரிக்கப்படுகிறது? பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட பயனர் விவரங்கள் இல்லாவிட்டால்; 

பயனரின் கணக்கை பாதுகாக்க முடியாது

பயனர் வாங்கும் பொருட்களை அவரிடம் கொண்டு சேர்க்க முடியாது

 

தரவு 2: ஓவியங்கள் மற்றும் பிற பொருள் வாங்கியதற்கான பதிவு

ஏன் சேகரிக்கப்படுகிறது? விற்பனையாளரான நாங்கள், இதனை, வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி சட்டங்களை கடைபிடிப்பதற்காக கண்டிப்பாக சேகரித்தாக வேண்டும்.

தரவு 3: பயனர் பதிவிடும் விருப்பம்

ஏன் சேகரிக்கப்படுகிறது? பயனரின் விருப்பங்களின் அடிப்படையில் அவருக்கு மேன்மையான புத்தகங்கள்/பொருட்களை பரிந்துரை செய்வதற்கும், சலுகைகள் வழங்குவதற்கும் இது தேவைப்படுகிறது. பயனர் வீட்டின் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்கும்போது கூட இப்படிப்பட்ட தகவலை கடைக்காரர் நினைவில் வைத்து செயல்படுகிறார். அதன் மூலம் பயனருக்கு பிடித்த பிராண்டு பொருட்களை வழங்குகிறார். 

தரவு 4: பயனர் பதிவிடும் கருத்து

ஏன் சேகரிக்கப்படுகிறது? பயனரின் விருப்பு வெருப்புகளை புரிந்துகொள்ள இந்த தரவு தேவைப்படுகிறது. அதே நேரம், பயனர் கருத்து பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவதால் இந்த வகை தரவு அத்தியாவசியமாகிறது. 

தரவு 5: பயனரின் இணையதள பயன்பாடு பற்றிய தகவல்

ஏன் சேகரிக்கப்படுகிறது? இணையதளத்தை பயன்படுத்தும்போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு மட்டும் ஏற்படும் இவ்வகை பிரச்னைகளை அறிந்துகொள்ளவும், பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. 

சேகரிக்கப்படும் தரவுகள் எப்படி பயன்படுத்தப்படும்

சேகரிக்கப்படும் தரவுகள் தனி பயனர்வாரியாகவும், ஏதேனும் அடிப்படையில் ஒருமித்தும், மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஆய்வு செய்யப்படும். ஆயிவின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சி எடுக்கப்படும்.   

தரவுகள் யாருடன் பகிரப்படும்? 

சேகரிக்கப்படும் தரவுகள், எங்களுடன் தொழில் உறவில் உள்ள நிறுவனங்கள் உட்பட யாருடனும் பகிரப்படாது. அவை, வாசகர் வட்டம் இணையதளத்தை நடத்தும் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சொத்தாக கருதப்பட்டு பாதுகாக்கப்படும். 

இதற்கு விதிவிலக்கு, அரசின் கோரிக்கை. ஒரு வேளை, சட்டப்பூர்வமாக, தரவுகளை பகிரும்படி அரசோ அதன் அங்கங்களோ கோரினாலோ உத்தரவிட்டாலோ, தரவுகள் சட்டப்படி பகிரப்படும். 

தரவுகள் எப்படி பாதுகாக்கப்படும்

அந்தந்த காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வல்லுனர்களின் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு, தரவுகளை பாதுகாக்க முழு முயற்சி எடுக்கப்படும். அவற்றையும் மீறி, அவ்வப்போது தரவு திருட்டு சம்பவங்கள் நடப்பது பயனர்கள் அறிந்த விஷயம் தான். 

அப்படி தரவு திருட்டு நடந்தது எங்கள் கவனத்திற்கு வரும்போது, பயனர்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். 

 தரவுகள் எவ்வளவு காலத்திற்கு வைத்திருக்கப்படும்

தாமிரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கும் வரை தரவுகள் சேகரத்தில் வைத்திருக்கப்படும். அதற்கு பின், சட்டத்தின் பால் அதற்கான தேவை எழவில்லை எனில், அவை யாருக்கும் பயனில்லாத வகையில் முற்றிலும் அழிக்கப்படும்.

தரவு பாதுகாப்பு சட்டமும் இந்த கொள்கையும்

தரவு பாதுகாப்பு சட்டம், அதன் விதிகள், அதன் வாயிலாக உருவாகும் ஆணையங்கள் மற்றும் முகமைகளின் ஆணைகளுக்கு ஏற்ப அவ்வப்போது இந்த கொள்கை மாற்றப்படலாம்.  

மேற்படி கொள்கயில் மாற்றங்கள் எப்படி கையாளப்படும்? 

மேற்படி கொள்கையை, சட்டத்தின் செயல்பாடு காரணமாகவோ வணிக காரணமாகவோ நாங்கள் மாற்றினால்; மாற்றப்பட்டதற்கான எச்சரிக்கையும் தகவலும், மின்னஞ்சல் வாயிலாக அல்லது தாங்கள் கணக்கில் நுழையும் போது தனி தகவலாக, தங்களுக்கு தெரிவிக்கப்படும்.

 

What is privacy data?

Image When using the website, data is generated by the actions of the users. Example: The ‘user’ person buys the ‘painting’. Thereby generating a data related to user. That is, the data that he purchased the book ‘Painting’ on a specific date, time, and price. This is private data. This is because the 'user' does not need to know that the particular book was purchased by anyone other than him and the seller of the book.

What data will be collected? Why?
Data 1: Information that the user enters during user registration and when purchasing sketches and other items.

Why is it collected?
If no user details including name, address, phone number, email;
User account cannot be protected
User purchases cannot be included with him

Data 2: Record for purchase of paintings and other material
Why is it collected? We, the sellers, must collect this in order to comply with the Income Tax and GST laws.

Data 3: User registration option
Why is it collected? It requires the user to recommend products and offer offers based on their preferences. The shopkeeper keeps such information in mind even when the user buys goods at the store near the house. Thereby providing the user with their favorite brand products.

Data 4: User posting feedback
Why is it collected? This data is needed to understand the user's likes and dislikes. At the same time, this type of data is essential because the user is provided with offers according to the number of feedback posts.

Data 5: Information about the user's web usage
Why is it collected? Technical glitches may occur when using the Internet. It helps to understand these types of problems that only happen to a few people and to improve the application experience.

How will the collected data be used?
The data collected will be analyzed individually by the user. Attempts will be made to meet the above objectives on the basis of AI.

With whom will the data be shared?
The data collected will not be shared with anyone, including companies with which we have a business relationship. They will be considered and protected by Thamarai Brothers Media Pvt. Ltd., which runs the Reader's Circle website.

The exception to this is the request of the state. In a legal way, data may be shared legally if the government so requests or orders its members to do so.

How is data protected?
During the respective period, the security measures recommended by the IT security experts will be implemented and every effort will be made to protect the data. Beyond that, it is a known fact that occasional data theft incidents occur.

When such data theft comes to our notice, users will be notified by email or phone.

How long will the data be kept?
Data will be kept in the database as long as Thamirai Brothers Media Pvt. After that, if the law does not require it, they will be completely destroyed to no avail.

Data Protection Act and this policy
This policy may change from time to time in accordance with the Data Protection Act, its rules, and the mandates of the agencies and agencies that make it through it.

How will the changes in the above policy be handled?
If we change the above policy due to law enforcement or business reasons; Alerts and information about the change will be communicated to you via email or as personal information when you log in to your account.