Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் , காஞ்சிபுரம்

Regular price Rs. 500.00
Regular price Rs. 300.00 Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1984

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

ஆயுதங்கள் தாங்கியும், அபயம் கொடுத்தும், திரண்ட தோளினைக் காண்பித்து நிற்கும் ஓவியரின் இந்தப் படைப்பைக் காணும்போது, ‘கண்ணன் கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கின்றானே’ என்ற வேதாந்த ஆசிரியரின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. சுடர்வீசும் ஆழியும், வெண்பாஞ்ச சன்னியமும் விரல்களில் சுமந்து, கதையை ஒய்யாரமாக ஊன்றி நிற்கும் பேரழகை, அடியார்களுக்குப் பரவசமூட்டும் நிலையில் காட்சிப்படுத்தியுள்ளார்.

 உயர்ந்த இந்தத் திருமேனிக்குப் பல மடிப்புகளுடன் அணிவிக்கப்படும் காஞ்சிப் பட்டின் மென்மையையும், தங்க ஜரிகையின் ஒளியையும் மிகநேர்த்தியாக வடித்துள்ளார். இறைவனின் திருக்கரத்திலே அணிந்திருக்கும் நாகாபரணம் நேரில் சென்றாலும் காணமுடியாத தனிச்சிறப்பு. 

உற்சவர் திருவீதி உலாவிற்குச் செல்லும்போது, அவர் எழுந்தருளி இருந்த இடத்தில் செல்வர் என்று அழைக்கப்படும் சின்ன பெருமாளை நிறுத்தி வைப்பார்கள். அந்த வழக்கத்தையும் கூர்ந்து கவனித்துள்ள ஓவியர், மூலவரின் திருவடிகளுக்கு நடுவே வெள்ளியால் ஆன செல்வர் நிற்பதைத் துல்லியமாகக் காண்பித்துள்ளார். அர்ச்சனைக்காகச் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் திருத்துலாய் இலைகள் வெள்ளிக்கூடையிலே இருப்பதையும் அர்ச்சித்த இதழ்கள் திருவடியிலே குவிந்திருப்பதையும் அழகுறக் காட்டியிருக்கிறார். 

எப்போதும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வரதராஜப் பெருமாளின் திருமேனியை முழுவதுமாக நாம் கண்டு அனுபவிக்க இயலாது. அந்தக் குறைதீர, இந்த ஓவியத்தில் மாலைகள் அதிகம் இல்லாமல் திருமேனியின் கம்பீரத்தையும் திருமுகத்தின் அருள்பொங்கும் தன்மையையும் வரைந்த ஓவியரின் தொண்டு அளப்பரியது.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.