ஓவியர் மணிவேல்
ஸ்ரீ ரெங்கநாதர், ஸ்ரீரங்கம்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
இந்த ஓவியத்தில் ஓவியர், விளக்கில் இருந்து எழும் ஒளியில் இறைவனைக் காணும் அனுபவத்தை வரைந்துள்ளார். தங்கக் கவசமிடப்பட்ட ஆதிசேஷனின் ஐந்து தலைகளும், பெரிய பெருமாளின் அங்கங்களும் ஓவியரின் நேர்த்தி.
உற்சவர் எழுந்தருளி இருக்கும் பீடத்திற்கு, சேர பூபாள ராயன் என்று பெயர். அதிலுள்ள வடிவமைப்பை அப்படியே ஓவியமாக்கியுள்ளார். உற்சவர் கழுத்தில் அணிந்திருக்கும் ஐந்து நீலக் கற்களும், நான்கு மாணிக்கங்களும் பொருந்திய நீலநாயகம் என்னும் ஆபரணம், இந்தத் திருமேனியின் தனிச்சிறப்பு. அதையும் நேர்த்தியாகக் காண்பித்துள்ளார்.
உற்சவரின் மேல் வலது கரத்தில் தாங்கியிருக்கும் சக்கரம் சற்று வளைந்து இருக்கும் அமைப்பையும் விடாது ஆவணப்படுத்தியுள்ளார். உற்சவரின் பீடத்திற்கு அருகே, பக்கத்திற்கு இருவராக நான்கு வெள்ளியால் ஆன மூர்த்திகளைக் காணலாம். தீர்த்தவாரிக்கும், யாகசாலைக்கும், பள்ளியறைக்கும் ஆன இந்த மூர்த்தங்களை, நேரில் சென்றாலும் அவ்வளவு எளிமையாகக் காணமுடியாது. பெட்டியிலே இருக்கும் சாலகிராமங்களையும் அர்ச்சனைக்கான வெள்ளிக் கூடையையும் விடாது காட்டியிருப்பது ஓவியரின் கூர்ந்த பார்வைக்கு ஓர் உதாரணம்.
பெருமாளின் திருவடிக்கு அருகே, சில காலம் பூஜையில் இருந்த அரங்க நகரப்பன் என்ற பெருமாளும், யாகசாலையில் மண்டலத்திற்கு நடுவே வைக்கப்படும் சிறிய அளவிலான மூர்த்தமும் அடுத்தமுறை செல்லும்போது நேரில் தரிசிக்க, நமக்குக் குறிப்பாக உதவுகிறது.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
