ஓவியர் மணிவேல்
ஸ்ரீ பகவதி அம்மன், சோட்டாணி்கரை
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1984
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
கருவறையில் அம்பிகை நான்கு திருக்கரங்களோடு மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் இடது கரம் அபயகரமாகவும் வலது கரம் வரம் கொடுத்து கைதுாக்கி விடும் கரமாகவும் இருக்கிறது. பெரிய திருமேனியோடு வேண்டி வரும் தன் குழந்தைகளை தாயுள்ளத்தோடு அரவணைத்து அருள்தரும் அன்னையை வழிபடும் அடியவர்கள் கண்ணீர் மல்கி நிற்பதை காணலாம். கேரள தேசத்தில் குறிப்பாக எந்த இடற் ஏற்பட்டாலும் அடியவர்கள் இந்த சன்னதிக்கு ஓடி வந்து அன்னைக்கு வண்ண மலர்கள் சாற்றியும் வஸ்திரங்கள் சமர்பித்தும் வழிபடுவார்கள். ருத்ராட்ச மாலை அணிந்து சிவபெருமானின் அடியவளாக காட்சி தரும் அன்னை பலகோடி அடியார்களுக்கு கண்கண்ட தெய்வம் ஆவாள்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
