Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள், பீளமேடு

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1984

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராக நின்ற நிலையில் காட்சி தருகிறார் அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள். மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி அபயம் கொடுக்கும் திருக்கரமும் கொண்டு, ‘என்னை சரணடைஎன்ற பகவத்கீதையின் சாரத்தை விளக்கியபடி நிற்கிறார். இருபுபுறமும் அன்னை திருமகளாகவும், புவிமகளாகவும் நின்று வரும் அடியார்களை காத்துக் கொடுக்கும்  திருக்கோலம் அடியார் மனதை விட்டு நீங்காத சிறப்பு பெற்றது.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.