ஓவியர் மணிவேல்
பண்ணாரி மாரியம்மன், ஈரோடு
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1984
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
தமிழகத்தில் சக்தி வாய்ந்த மாரியம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது பண்ணாரி மாரியம்மன். பழைய காலத்தில் மண்ணாரி என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, மரங்கள் நிறைந்த அடந்த வனப்பகுதியாக இருந்தது. அருகில் இருந்த கிராமத்து மக்கள், தங்களுடைய கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்காக ஓட்டி வருவார்கள்.
அப்படியிருக்க, ஒரு பட்டியைச் சேர்ந்த காராம்பசு, நாள்தோறும் கூட்டத்தில் இருந்து விலகிப் போவதை உரிமையாளர் கவனித்தார். ஒரு நாள் அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று பார்க்கையில், அந்தப் பசு, அந்தக் காட்டில் இருந்த வேங்கை மரத்தின் வேரில் தன் மடியில் சுரந்திருந்த பாலை தன்னிச்சையாகப் பொழிவதைப் பார்த்தார். மரத்தடியில் கணம் புற்கள் நிறைந்த அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து, நாள்தோறும் பசு பால் சுரப்பதைக் கண்டு அதிசயித்து, இந்தச் செய்தியை ஊர்மக்களிடமும் தெரிவித்தார்.
மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி, குறிப்பிட்ட அந்த இடத்தைச் சுத்தம்செய்து பார்க்கையில் அங்கே ஒரு புற்றும், அதன் அருகில் சுயம்புவாக வளர்ந்திருந்த ஒரு லிங்க திருவுருவமும் கண்டு அதிசயித்தார்கள். அந்தக் கூட்டத்திலே இருந்த ஒருவர் மேலே அருள்வந்து ஆடியபடி, கேரளாவில் இருந்து பொதிமாடுகளை அழைத்துக் கொண்டு கர்நாடக தேசம் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்த அன்னை தான் என்றும், இந்த இடம் சோலைகள் சூழ்ந்து அழகாக இருந்ததால், தான் இங்கேயே தங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
தன்னைக் கண்டெடுத்த இடத்தைச் சுத்தம்செய்து, தனக்கு ஒரு சிறிய ஆலயம் எழுப்பி வழிபடும்படியும், தன்னைப் பண்ணாரி மாரியம்மன் என்று அழைத்துக் கொண்டாடவும் உத்தரவிட்டாள். இதைத் தொடர்ந்து, கணம் புற்களைக் கொண்டு அன்பர்கள் சிறிய ஆலயம் ஒன்றை எழுப்பி வழிபட்டார்கள்.
அன்னையின் அருள் உலகெங்கும் பரவியதால், இந்த ஆலயம் மிகப் பெரிய அளவில் இன்று காட்சி தருகிறது.
ஓவியம்:
முதலில் அன்னை சுயம்பு லிங்க வடிவிலே காட்சி தந்தாள். கருவறையில் விளங்கும் அந்தச் சுயம்பு வடிவிற்கே முதல் பூஜைகள் நடைபெறும். அபிஷேகம் செய்து, கண்மலர் சாற்றி, அன்னையை அலங்கரிப்பார்கள். இந்தக் குறிப்புகளை மிகச் சிறப்பாக உள்வாங்கி அதை அப்படியே தன் ஓவியப் பலகையிலே காட்சிப்படுத்தியுள்ளார். பின்னாளில், அன்னையின் அருள் கொஞ்சும் வடிவம் ஒன்றை எழுந்தருளச் செய்து, அவளுக்கும் அபிஷேக அலங்காரங்கள் செய்வது வழக்கமானது.
மாரியம்மனின் வடிவிற்கு ஏற்றார்போலே அக்னி சுவாலைகள் சூழ்ந்த மகுடமும், பாசக் கயிறு, டமருகம் குருவாள் கபாலம் ஏந்திய திருக்கரங்களும், வலது திருவடியை தாமரை பீடத்தில் மடித்து, இடது திருவடியை கீழே அமர்த்தின நிலையில் வீராசனமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையை, நினைத்த பொழுதெல்லாம் நாம் வணங்க ஓவியர் உதவி செய்துள்ளார். அன்னை தன் கண்களால் உற்று நோக்கினால், எல்லா வளங்களையும் பெறலாம் என்ற அபிராமிபட்டரின் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
