ஓவியர் மணிவேல்
ஸ்ரீ சிவன், காளகஸ்தி
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1985
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
மிகவும் தொன்மையான சுயம்புலிங்க மூர்த்தி சதுர வடிவிலான ஆவுடையாரில் எழுந்தருளியுள்ளார். மூல லிங்கம் மிகவும் மெலிந்த திருமேனி உடையது. சாபம் தீர பூஜை செய்த பாம்பு குடை பிடிக்க சிலந்தி தன்மேல் ஊறிய தடங்களை தாங்கியும் யானைத் தந்தத்தின் குறிகளைச் சுமந்தும் அடியவர்க்கு எளியவனாக காலத்திப் பெருமான் காட்சி தருகிறார்.
இந்தக் குறிப்புகள் அனைத்தையும் உள்வாங்கிய நம் ஓவியரின் தூரிகை, அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த லிங்க மூர்த்தத்தின் மேல் 9 பட்டைகள் கொண்ட தங்கத்தால் ஆன கவசம் சாற்றப்படும். ஒவ்வொரு பட்டையிலும் மூன்று வில்வ தலங்கள் வீதம் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் 27 வில்வ தலங்கள் இதில் பொறிக்கப்பட்டிருக்கும்.
அதன் மேலே முப்புரி நூல் திகழ, காலத்தி பெருமான் காட்சி தருவார். வேறெங்கும் காணமுடியாத இந்த அதிசயக் கோலத்தை ஒன்றும் குறையாது ஆவணப்படுத்தியுள்ளார் நம் ஓவியர்.
அழகான வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளிக்கவசம் சாற்றிய ஆவுடையாரும், அதற்கு முன் அமைந்துள்ள பள்ளியறை சொக்கரின் சிறிய திருமேனியும், காலத்தி தரிசனத்தை நமக்கு நிறைவுசெய்து தருகிறது. கருவறையில் உள்ள போகசக்தி அன்னையையும் தரிசித்து இறைவனுடைய அருளைப் பெற்று மகிழலாம்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
