ஓவியர் மணிவேல்
ஸ்ரீ முருகன், திருச்செந்தூர்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1982
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
முருகப் பெருமானின் வடிவங்களில் பிரம்ம சாஸ்தா என்று அழைக்கப்படும் கோலத்திலே, இந்தத் தலத்தில் முருகன் குடிகொண்டிருக்கிறார். மேல் இரு கரங்களில் சக்தியாயுதமும் ஜெபமாலையும் ஏந்தி, கீழ் வலது கரத்தில் சிவபூஜை செய்யும் மலர் ஏந்தி, கீழ் இடது கரத்தைத் தொடையிலே நிறுத்தி அழகுறக் காட்சிதரும் வடிவத்தை, நேர்த்தியாகத் தீட்டியிருக்கிறார் ஓவியர்.
அடியார்கள் வேண்டிக் கொண்டு தங்கக்கவசம் சாற்றி வழிபடக் கூடிய சிறந்த அலங்காரத்தை, நாம் என்றும் காணும்படி கொடுத்துள்ளது இந்த ஓவியம். முருகப் பெருமானின் தோளிலே சாய்ந்தபடி நிற்கும் ஞானவேல், அதன் வடிவமைப்பை நேரில் சென்றாலும் இவ்வளவு நேர்த்தியாகக் காணமுடியாது.
நெற்றியில் துலங்கும் திருநீறும், முடியிலே அணிந்துள்ள நவரத்தினங்கள் பதித்த கிரீடமும் காண கண்கோடி வேண்டும். இந்தத் தலத்தின் ஸ்ரீபலி மூர்த்திகளாக வெள்ளியிலும் தங்கத்திலும் உதயமார்த்தாண்ட வர்மன் செய்து கொடுத்த திருமேனிகளை, இந்த ஓவியத்தில் நன்கு காணலாம். இதுதவிர, பலரும் அறியாத ஓர் இரகசியச் செய்தியை ஓவியர் இந்தப் படத்திலே காட்டியுள்ளார்.
அது, முருகப் பெருமானின் கருவறையின் உள்ளே அவரே வழிபட்ட ஜெகநாதர் என்ற சிவலிங்கத் திருமேனி. அந்தத் திருமேனியையும் நாம் தரிசிக்கும்படி செய்கிறது இந்த ஓவியம்.
திருச்செந்தூரை கைலாய மலையோடு ஒப்பிடுவார் அருணகிரிநாதர். இந்த ஓவியத்தின் மூலம், ‘கைலைமலை அணைய செந்தில் பதி’ என்ற வாக்கியம் நிரூபணம் ஆகிறது.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
