ஓவியர் மணிவேல்
ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமி, வைத்தீஸ்வரன் கோவில்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1984
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
நாள்தோறும் விழாக்கோலம் பூணும் வைத்தீஸ்வரன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிருத்திகைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. பல்லாயிரம் அடியார்கள் கலந்து கொண்டு தரிசிக்கும் இந்த நாளில், முத்தையாவிற்கு தருமை ஆதீனத்தின் குருமணிகள் ஒவ்வொருவரும் அன்போடு செய்தளித்த பல விலையுயர்ந்த ஆபரணங்களை அனுபவிப்பார்கள்.
மாதத்திற்கு ஒருமுறை கிடைக்கும் இந்த அற்புதக் காட்சியை, நம்முடைய ஓவியர் புகைப்படம் எடுத்ததுபோலே ஆவணப்படுத்தியுள்ளார். தங்கத்தில் பூட்டிய ருத்ராட்ச மாலை, தங்கக் காசுமாலை, மகரகண்டி, தங்கத்தாலான முப்புரிநூல், மார்புப் பதக்கங்கள், நவரத்தினங்கள் இழைத்த கிரீடம், வைரம் பதித்த வேல் என, ஆபரணங்கள் சாற்றிக் கொண்டு அவற்றின் அழகிற்கு அழகு சேர்ப்பார் முத்தையா. இந்த ஆபரணம் ஒவ்வொன்றின் வடிவையும், அவ்வளவு ஏன் ஒவ்வொரு இரத்தினக் கல்லின் நிறத்தையும்கூட துல்லியமாகத் தீட்டியுள்ளார்.
அவரருகே நிற்க பொருத்தமாய் ஆபரணங்கள் அணிந்தும், நாகபில்லை அமைத்த தங்க ஜடையும் சார்த்திக் கொண்டு வள்ளியும் தெய்வானையும் இருக்கக் காணலாம். இவருக்கு முன்பாக இருக்கும் சிறிய வெள்ளிப் பெட்டகத்தில், நாள்தோறும் இவர் பூஜை செய்யும் முத்துலிங்கம் என்ற சிவலிங்கத் திருமேனி இருப்பதைக் காணலாம். அந்த பூஜைப்பெட்டியின் வடிவமைப்பு கூட மாறாமல் ஓவியம் எழுதுவது வேறு யாராலும் முடியாதது.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
